நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ச பெயரிடப்பட்டுள்ளதாக பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அந்தக் கட்சியினர் இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கோட்டாபய ராஜபக்சவே சரியான நபரென, நினைக்கின்றார்கள் என பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவரது இயலுமை மற்றும் குறைகள் தொடர்பில், தான், கருத்து தெரிவிக்க போவதில்லையெனவும் எனினும்,பிரச்சினையை புரிந்து கொண்டுள்ள அந்தத் தரப்பினர், பிரச்சினையை தீர்ப்பதற்கான, சிறந்த நபராக கோட்டாபாயவை, தெரிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி இந்த நிலைமையை சரியாக புரிந்துகொள்ளாவிடின், மக்களின் ஆதரவு கிடைக்காமல் போகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் அளிப்பதாகவும், இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இதுத் தொடர்பில் அவதானம் செலுத்தாவிடின். மக்கள் நேர்மாறாக சிந்திப்பார்கள் எனவும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.