பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவதாக எலிமினேட் ஆனாவர் வனிதா. இவர் போட்டியாளர்களின் பிரச்சனைகளில் தானே மூக்கை நுழைத்து பிரச்சனையை பெரிதாக்குவதாக மக்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்க கூடிய விதத்தில் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார். வந்ததுமே முகென் அபிராமி பிரச்சனைக்குள் தலையிட்டுள்ளார்.
வெளியில் இருந்த மீண்டும் உள்ளே சென்ற வனிதா விற்கு இன்னும் புத்தி வரவில்லை என்பது அவரது நடவடிக்கைகளிலே தெரிகின்றதாகவும், அவரது முகபாவங்கள் மற்றும் செய்கைகள் மிகவும் கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் உள்ளதாக கருத்துக்கள் வெளியாகி வருகிறது.
அத்துடன், அவரை மீண்டும் உள்ளே அனுமதித்தது மக்களின் வாக்குகள் மீதான அவமரியாதையை காட்டும் விதமாக இருப்பதாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதேவேளை, விருந்தினராக வீட்டிற்குள் வந்திருக்கும் இவருக்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.