கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாதம்பிட்டி கனத்தை பகுதியின் அருகே இரு பாதாள உலக கோஷ்டி குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டதாகவும், இதன் போது இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 39 வயதுடைய ஆனமாலு ரங்க என்பவரும் 22 வயதான இளைஞர் ஒருவருமே உயிரழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.