பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை பிரகடனம் இன்று கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் வைத்து வெளியிடப்பட்டது.
பிரச்சினையின் அடிப்படை
பிரச்சினையிலிருந்து பிரச்சினைக்கு
பிரச்சினையிலிருந்து விடுபடுதல்
பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறை மற்றும் திட்டம் ஆகிய காரணங்கள் அடிப்படையில் நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் குறித்த கட்சி கொள்கை பிரகடனத்தை வெளியிட்டுள்ளது.
சகலருக்கும் வீடு, காணி, விவசாய மற்றும் மீன்பிடித்துறைகளில் புரட்சி, இலங்கைக்கான எதிர்காலம், கொரோனா அச்சுறுத்தலை தடுத்தல், பாடசாலை பாதுகாப்பு, சர்தேச உறவுகள், ஜனநாயக நிர்வாகம், அரச நிர்வாகம் உள்ளிட்ட யோசனைகள் குறித்த கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குப்பிடத்தக்கது.