கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இறந்தவர்களை வைப்பதற்காக சுமார் 4,500 ரூபாய் பெறுமதியான அட்டைப்பெட்டியில் ஆன சவப்பெட்டி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையினால் கடந்த தினம் குறித்த சவப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினரான பிரியந்த சஹபந்துவின் எண்ணத்துக்கு அமைய குறித்த சவப்பெட்டி தயாரிக்க பட்டுள்ளது.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை ரூ.30000 முதல் 40000 வரையான அதிக விலை கொண்ட சவப் பெட்டிகளில் வைத்து இறுதி சடங்கினை மேற்கொள்ள சிரமப்படும் மக்களுக்காக இந்த எண்ணம் தோன்றியதாக அவர் தெரிவித்தார்.
100 கிலோ எடையுள்ள ஒரு உடலை சவப்பெட்டியில் வைக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.