கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர் மற்றும் பாபர் சந்தியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்ததில் நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளமையால் துமக்களை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதுடன், குறிப்பிட்ட வீதிகளில் பயணம் செய்வோரை மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.