வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இன்று ஆரம்பமாகும் இந்த பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன் எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது
இந்நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இம்முறை திருவிழாவினை முன்னிட்டு கோயிலுக்கு செல்லும் நான்கு பிரதான நுழைவாயில்களிலும் விசேட சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.