ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமை கைது செய்யும்படி எதிர்ப்பலைகள் எழும்பியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரனுடன் அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடிய காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் ஹக்கீமை கைது செய்யுமாறு ராவனா பலய, சின்ஹாலே ஆகிய கடும்போக்குவாத பெளத்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. ஏற்கனவே அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முஸ்லிம் அமைபொன்று முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.