கேரளாவில் சில பகுதிகளுக்கு இன்று புதன்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பெய்து வரும் கடும் மழையினால் அங்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த மழையுடன் கூடிய காலநிலையில் ஏற்பட்ட மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இந்த கனமழையினால் பாதிக்கப்பட்ட சுமார் 2.26 லட்சம் மக்கள் 1,239 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கேரளாவில் உள்ள மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(புதன்கிழமை) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இடுக்கி, திரிசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர், கசர்கோட் ஆகிய இடங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.