தற்போது நாளாந்த செய்தியாக குளவி கொட்டுதல் பல மாணவர் மற்றும் தேங்காய் பறிப்பவர்கள் ,மலையக தோட்டங்களில் பலர் காயம் என தினம் செய்தியாக வருகின்றது .
இதில் தற்போது கூட குளவித்தாக்குதலினால் பலர் மரணிப்பது அதிகரித்துள்ளது .முந்தைய காலங்கள் போன்று குளவி குத்தினால் ஏதாவது அமிலப்பொருளான பழப்புளி ,தேசிப்புழியால் தாக்கப்பட்ட இடத்தில் பூசிவிட்டு வழமையாக தங்களது அன்றாட கடமைகளை செய்யும் போது திடிரென்று உடல் தடிச்சு மயங்கி மூச்சுகஸ்டம் வந்த உடன் வைத்தியசாலை கொண்டு சென்று மரணித்த பல சம்பவம் ஒவ்வொரு வருடமாக நிகழ்கின்றது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் கிழக்கில் பின்தங்கிய கிராமமான கடற்கரைசேனையை சேர்ந்த செம்பாத்தை(60வயது)வயோதிப பெண்மணி சந்தோசபுரத்தில் ஆடுமேய்த்துகொண்டிருந்த போது குளவிக்கூடு கழைந்து அவ்விடத்திலிருந்த இருவரையும் கொட்டியதால் வலியுடன் அவதியுற்று தமது கிராமத்தில் பழப்புளி எல்லாம் பூசி காலவிரயமாகி சம்பூர் வைத்தியசாலை சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மூதூர் ஆதார வைத்தியசாலை இடம்மாற்றிய போது நேற்று மரணித்துள்ளார்.
இதே போன்று ஏறாவூரில் கடற்கரையோரம் உள்ள பின்தங்கிய கிராமமான சவுக்கடி சேர்ந்த தனோஜினி தமது பாடசாலை வகுப்பில் வைத்து குளவி கொட்டுதல் இலக்காகி ஏறாவூர் வைத்தியசாலை கொண்டு சென்று அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இடம்மாற்றிய போது மரணித்துள்ளமை இப்படி பல மரணங்கள் எமது மக்களின் கவனயீனங்களாலும் இடம்பெறுகின்றது .
உண்மையிலே குளவி கொட்டினால் அன்றைக்கே வைத்தியசாலை சென்று சிகிச்சை பெறுவது உசிதமானது நாம் நினைப்பது குளவி குத்தின பகுதி வீக்கத்துடன் முடிந்தது சிறிதுநேரம் வலி காட்டும் அது தானாகவே குறைந்துவிடும் என கருதியே உரிய சிகிச்சை பெறாமல் கடைசி கட்டத்தில் மரணத்தை ஏற்றுக்கொள்கின்றோம் .
குளவி கொட்டினால் வலி மாத்திரமில்லாமல் ஆபத்தான பல விளைவுகள் எமது உடலில் ஏற்படுகின்றது அதை தவிர்ப்பதற்கு வைத்தியசாலையில் கட்டாயம் ஊசி மருந்து ,குளிசை பெற வேண்டியுள்ளோம்.
இதில் முக்கியமானது குளவி தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற எமது உடலின் நோய் எதிர்ப்புச்சக்தி ஒவ்வாமையை வெளிப்படுத்தும் இது அதிக நேரம் நிலைத்தால் அனபைல்டிக் சொக் எனும் அதிர்ச்சி ஏற்படுத்தி வைத்தியசாலை சிகிச்சை பெறாவிடின் மரணம் நிகழும். .
குளவி தாக்குதலால் கொட்டிய இடத்திலுள்ள கொடுக்கை நீக்க வேண்டும் ,அதில் வீக்கத்திற்கு ஐஸ் கட்டியினால் ஒத்தனம் கொடுத்து சில நேரத்தில் நிகழ காத்திருக்கும் ஒவ்வாமையான அறிகுறிகள் உடலில் கொட்டிய இடம் மற்றைய தோல் பாகங்களில் திடிரென்று சிவந்து வீக்கம் போன்று சிறிதாதடித்து புடைத்து நிற்கும் ,அதிக வலி அதிகரிக்கும் ,மூச்சுக்கஸ்டம் ,தலை சுற்று ,மயக்கம் ,வாந்தி ஏற்பட்டு ,குருதியமுக்கம் குறைந்து செல்லும் இவைதான் ஆபத்தான நிலை இவற்றின் ஒவ்வொரு அறிகுறிகளான வலியை சடுதியாக குறைக்கும் மாத்திரை மற்றும் ஒவ்வாமைக்கான ஊசிமருந்து (ஹைட்ரோ கோட்டிசன் ,பிரிட்டன்),குருதியமுக்கம் குறைவிற்கு நாளம் மூலம் சேலைகொடுத்தல் போன்ற படிமுறைகளுக்காக வைத்தியசாலை கொண்டு சென்று குளவித்தாக்குதலிருந்து பாதிக்கப்பட்டவர் உயிர்களை காப்பற்றுவோம்,