திருகோணமலை தம்பலகாமம் பிரிவின் கிராம சேவையாளர் தம்பிராஜா ராஜசிங்கம் நேற்று வியாழக்கிழமை பணிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக அரச பணியில் தன்னை அர்ப்பனித்து கொண்ட தம்பி ராஜா ராஜசிங்கம், தம்பல கிராம சேவையாளராக நீண்டகாலமாக பணியாற்றினார்.
நீண்டகாலமாக தனக்கென்று எதுவும் எதிர்பார்க்காமல், சுயநலங்கள் அற்ற மனிதராக சேவையாற்றி, மக்களின் தேவைகளைய உடனடியாக பூர்தி செய்தமையினால் தம்பலகாமம் மக்களுக்கு மிகவும் நெருக்கமானவராக உள்ளார்.
இந்த நிலையில் இவரது ஓய்வு தம்பலகாம பிரேத மக்களுக்கு பெரிதும் இழப்பாக கருதப்படுகிறது.
இவர் தனது ஓய்வினை அறிவித்துள்ள போதும் கிராம சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறாரே தவிர சமூக பணி தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.