கிராமங்களுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமத்துடனான கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் 12வது கட்டம், இன்று கோமரங்கடவல பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.
கிழக்கு மாகாணத்திற்குரிய கோமரன்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட க்யூலே கடவல பாடசாலையில் நிகழ்வு இடம்பெறுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதேச மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
கல்வி, சுகாதாரம், விவசாயம், பொருளாதாரம் போன்ற விடயங்களில் கோமரங்கடவல பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.