கிண்ணியா வலயத்தில் சிங்கள மொழி மூல பாடசாலை அமைக்கப்படுவதன் முக்கியதத்துவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தலைமையில் கலந்துரையடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்லின சமூகங்கள் வாழும் எமது நாட்டில் எமது பிரதேச மாணவர்களும் பல துறைகளிலும் அனைத்து இன மக்களோடும் இணைந்து பணியாற்றுவது காலத்தின் தேவை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக கிண்ணியா கல்வி வலையத்தில் சிங்கள மொழி மூல பாடசாலை ஒன்றை அமைப்பதன் முக்கியத்துவம் பற்றிய ஆலோசனை கூட்டம் எனது ஏற்பாட்டில் இன்று மாலை இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிண்ணியா நகர பிதா நளீம்,கிண்ணியா ஜமிய்யதுல் உலமா சபை தலைவர் A. M.ஹிதாயத்துல்லா மௌலவி, சூறா சபை தலைவர்A. R. M. பரீட் (ஓய்வுபெற்ற அதிபர்), ஓய்வுபெற்ற அதிபர்களான S. M. பாரூக்,A. S. ஜுனைதீன் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் A. S. M. மஹ்ரூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
