ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்ததற்கு லடாக் புத்த மத அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
லே பகுதியில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
லடாக்கில் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு அதிகமானோர் புத்தமதத்தை பின்பற்றுகின்றனர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டமையை வரவேற்கும் முகமாக நாடு முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், லடாக் புத்த மத அமைப்பினர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.