ஜம்மு காஷ்மிரின் கத்துவா பகுதியில் வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய அரசினால் இரத்து செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த பகுதிகளில் இயல்பு நிலை சற்றெ பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுறுவல் அதிகரித்துள்ளதாக இந்தியா கூறிவருகிறதுடன் ஆயுத பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் சமீப காலமாக அதிகளவில் ஊடுறுவி வருவதாகவும், தற்கொலை தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, காஷ்மீருக்குள் ஊடுறுவும் வகையில் சுமார் 200 பயங்கரவாதிகள் காத்திருப்பதாகவும், இதன்காரணமாக எல்லைப் பகுதியில் இராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களுடன் வாகனமொன்று கைப்பற்றப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.