காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அதிரடி தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சுதந்திர தினம், நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், காஷ்மீரில் மாநிலத்தை ஒட்டியமைந்துள்ள எல்லையில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீரின் உரி மற்றும் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
இதற்கு இந்திய ராணுவத்தினர் கடுமையான பதிலடி கொடுத்தனர். இந்திய ராணுவத்தின் அதிரடித் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.