நீரழிவு நோய் கண்ட நபர்கள் உடலில் ஏற்படும் சிறு காயங்களை உடனுக்குடன் தொடர்ந்து கவனிப்பது-மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
- சுத்தமான வெண்ணீர் மற்றும் சோப் கொண்டு அடிபட்ட காயங்களைக் கழுவ வேண்டும்.
- ஆல்கஹால்/அயோடின் கொண்ட மருந்துகளை காயத்தின் மேல் பூச வேண்டாம். இத்தகைய மருந்துகள் எரிச்சலை உண்டாக்கும். மருத்துவரின் ஆலோசனையின் படி தான் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
- சுத்தமான பான்டேஜ் கொண்டு காயத்தை மூடி வைக்கவும்.
- முழுமையான சிகிச்சை இன்மையால் உடல் உறுப்புகள் இழப்போ(அ)உயிர் இழப்போ ஏற்படுவதனை தடுத்திட சிறிய காயத்தை கூட அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரிடம்தான் சிகிச்சை எடுக்க வேண்டும்