சூர்யா நடிப்பில் வெளியாகியள்ள காப்பான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படம் நேற்று வெள்ளிக்கிழமை உலகெங்கும் வெளியாகியது.
‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை அடுத்து சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்துக்கு ஆரம்பம் முதலே மக்களிடம் எதிர்பார்ப்பு காணப்பட்டிருந்த நிலையில், படத்தை பற்றி வெளியாகும் நல்ல விமர்சினங்கள் திரைப்படத்திற்கான இரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகிய என் ஜி கே படம் கலவையான விமர்சினங்களை பெற்று வரவேற்பும் மந்தமாக இருந்த நிலையில், தற்போது காப்பானால் சூர்யா காப்பாற்றப்பட்டிருக்கின்றார்.
இந்நிலையில், திரைப்படத்தை பார்த்த மக்கள் அனைவரும் குறித்த திரைப்படத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
‘காப்பான்’ படத்திற்காக திரையரங்குகளில் இரசிகர்களின் கூட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.