மட்டக்களப்பு – சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய ஆயுததாரியின் உடல் பாகங்கள் காத்தான் குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலுக்குரிய மையவாடியில் இன்று புதைக்கப்பட்டுள்ளது.
கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை இன்று மாலை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த உடற்பாகங்கள் மட்டக்களப்பில் இந்துக்களுக்கு சொந்தமான மயானத்தில் புதைக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்புக்கள் எழும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.