திருகோணமலையில் தங்கதுரை தனுஸ்டன் என்பவரை கொடூரமாக கொலை செய்த சந்தேகநபரின் பிணை கோரல் மனு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி திருகோணமலை கடற்படை பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஒருவருடைய கழுத்தை வெட்டிக் கொலை செய்தமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் டேனியல் என்பவர் கைதுசெய்யப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பிணை கோரி திருகோணமலை மேல் நீதிமன்றில் சட்டத்தரணி தனுஷ்க மெதகெதர ஊடாக பிணை விண்ணப்பம் செய்யப்பட்டு நேற்று புதன்கிழமை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது.
குறித்த வழக்கில் அனைத்து விடயங்களையும் பரிசீலனை செய்தபோது இது ஒரு திட்டமிட்ட பயங்கரமாக மேற்கொள்ளப்பட்ட கொலை என நீதிபதி கூறினார்.
அத்துடன், இலங்கை மாத்திரமில்லாமல் உலக மக்களையே அதிர்ச்சிக்கும் மக்களின் மனதை இறுலடிக்கக்கூடியவாறு மேற்கொள்ளப்பட்ட ஒரு மனிதாபிமான மற்ற கொலை எனவும் நீதிபதி குறித்த சந்தேக நபரின் தாயிடம் கூறி எச்சரிக்கை செய்து குறித்த பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார்.
மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்த இந்த கொலை சம்பவம் பற்றி ஒரு சரியான அணுகு முறையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பணித்ததோடு இது ஒரு பகிரங்கமான கொலை எனவும் இக்கொலை குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி பகிரங்கமாக எச்சரித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது என்னவெனில் இறந்தவரின் சந்தேக நபரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள் சந்தேகநபரை அந்த சந்தேக நபரை குறித்த யுவதி விட்டு பிரிந்து இறந்தவரை காதலிக்க தொடங்கியதன் காரணமாக சந்தேகநபரான வஞ்சம் தீர்க்கும் நோக்கில் குறித்த தினத்தில் இறந்தவர் ஆகிய தங்கதுரை தனுஷ் 20 வயது உடைய என்பவரை மோட்டார் சைக்கிளை எடுத்து வருமாறு கூறி சந்தேகநபர் கத்தி ஒன்றை தமது உடலில் மறைத்து வைத்து திட்டம் தீட்டி எடுத்துவந்து இறந்தவருடைய மோட்டார் சைக்கிளில் பின் பக்கமாக அமர்ந்து சென்று விசேடமாக இறந்தவரை சந்தேக நபர் கூட்டிவந்து இறந்தவர் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையில் திருகோணமலை கடற்படை முகாமின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைத்து தமது உடம்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் இறந்தவரை இறந்தவரின் கழுத்தை வெட்டியுள்ளார்.
விசேடமாக இறந்தவரை கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்தத்துடன் ஓடிவந்து கடற்படை முகாமுக்கு முன்னால் அமைந்திருக்கும் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சக்கர வண்டி சாரதியிடம் தன்னை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறியும் முச்சக்கரவண்டி சாரதி அதனை பொருட்படுத்தாது ஓடிவிட்டார். இது அந்த இடத்தில் காணப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி உலகம் பூராகவும் பரப்பப்பட்டது பொதுமக்களுடைய அபிப்பிராயம் குறித்த காயம்பட்டவரை முச்சக்கரவண்டி சாரதியின் ஆனால் அந்த நேரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருந்தால் அவரின் உயிரை பாதுகாத்து இருக்கலாம் என்பதாகும் எனவே தான் மேல் நீதிமன்ற நீதிபதி இது ஒரு மனித நேயமற்ற செயல் என முச்சக்கர வண்டியின் சாரதி பற்றியும் அதன் கடுமையாக விமர்சித்தார் இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் நடை பெறவில்லை எனவும் கூறி குறித்து பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார்.