இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான மதிப்பீட்டு நடவடிக்கையொன்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இடம்பெறவள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படடு என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது அமர்விற்கு சமாந்திரமாக இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 20ம் திகதி வரையில் இலங்கை உள்ளிட்ட 36 நாடுகளில் பதிவாகியுள்ள 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின், பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான செயற்குழுவின் அறிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.