பஸ் ஓட்டுனர்கள் போட்டிக்கு ஓடுவது போன்று ஓடி தனது மனைவியை பறிகொடுத்துவிட்டதாக குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் கணவன் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
தாங்கள் வாழ வேண்டிய இளவயதிலே மரணத்தை கொடுத்து தனது குழந்தைகளை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்கள் .இனி இழந்த உயிர் வர போகின்றதா???அல்லது இவ்வாறன ரேஸ்ற்கு ஓடும் பேருந்து ஓட்டுனர்கள் கூட இதைப்பட்டறிவாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப் போகின்றார்களா???
அரச பேருந்தானது மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்த்திசையில் பயணித்த தனியார் பேருந்துடன் மோதியதினால் இவ் அசாம்பாவிதம் ஏற்பட்டது .
களுத்துறை விபத்தில் தங்களது உறவினர்களை பறிகொடுத்த குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.
