எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க கூடிய ஒரேயொரு வேட்பாளர் சபாநாயகர் தேசபந்து கரு ஜெயசூர்யவே என்று பேராதனை பல்கலைக்கழகம் செய்த மக்கள் கருத்துக் கணிப்பிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்தக் கணிப்பீட்டில் கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் இணைக்கப்பட்டு இந்த கணிப்பு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய நாடு, இனம் மற்றும் மதம் ஆகிய உணர்வு கொண்ட மற்றும் அவை குறித்த நம்பிக்கை வைக்கக் கூடிய சிரேஷ்ட அனுபவம் கொண்ட ஒரே ஒருவர் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவே என்று கணிப்பீட்டில் தெரிவந்துள்ளது.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்கினால் அதன் இலாபம் கோட்டாபய ராஜபக்ஷவை விடவும் ஜேவிபி யின் அனுர குமார திஸாநாயக்கவுக்கே சேரும் என்று அந்த ஆய்வில் கண்டுப்பிடிக்கபட்டுள்ளது.