சபாநாயகர் கரு ஜயசூரிய நாட்டின் நிருவாகத்தை கொண்டு செல்வதற்கு பொருத்தமானவர் என அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது.
இதை போசகர் வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பி.எம்.ஐ.சி.எச். இல் நேற்று மாலை நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு மூன்று பௌத்த பீடங்களினாலும் வழங்கப்பட்ட கௌரவ பட்டத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்