பேருந்தொன்று வேன் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கண்டி – கொழும்பு வீதியின் கலல்கொட பகுதியில் குறித்த பேருந்தொன்று அதிக வேகத்தில் சென்று வேன் ஒன்றுடன் மோதியதி விபத்திற்குள்ளானதீலேயே 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
கப் ரக வாகனம் ஒன்றை முந்திச் செல்ல பஸ் முற்பட்டபோதே வேனுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
நாட்டில் தினமும் விபத்துக்கள் அதிகரிப்பதுடன் பலி எண்ணிக்கைகளும் அதிகரித்து வருவதால் மக்கள் வீதியில் நடமாடுவதற்கே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் சாரதிகள் அதீத அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்பது முக்கியம்.