பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ கண்டியில் பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
கண்டியில் இன்றைய தினம் தனது ஆதரவாளர்களை சந்தித்திருந்த நிலையிலேயே அவர் இந்த வழிபாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கண்டியில் இன்று மாலை பல கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
