ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் தமிழுக்கு உரித்தான கலைகள்.
முந்தைய காலத்தில் மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சித்தர்கள்,யோகிகள்,ரிஷி மகான்கள் பல அரிய பொக்கிஷமான கலைகளை தமது அக ஞானத்தால் உணர்ந்தவற்றை உலகிற்கு தந்து சென்று உள்ளனர்.
திருமூலர் தனது திரு மந்திரத்தில்
” உடம்பால் அழியின் உயிரால் அழிவர்,,”
” திறம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”
” உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து”
” உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
இவர்கள் மனித உடலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து உள்ளனர் என்பது இந்த ஒரு பாடல் ஒன்றே போதுமானது. ஆன்மீகத்தில் அடிப்படையே மனித உடலை வளர்ப்பது. ( சித்திரம் வரைவதற்கு சுவர் அவசியம்)
இக் கால கட்டத்தில் ஒவ்வொருவரும் எப்படி தமது உடலை பராமரிக்கிறார்கள் என்பது 10 நிமிடம் வைத்தியசாலை முன்பாக நின்று பார்த்தால் புரியும் மனிதர்களின் ஆரோக்கியம்.
இந்த மனித உடலுக்குள் எவ்வளவு கோடானா கோடி விசயங்கள் அடங்கி உள்ளது என்பது ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு புரிவதில்லை. இறைவன் தந்த பெறுமதியான செல்வமும் விலை மதிப்பற்றது
என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய காலகட்டத்தில் அனைத்து உணவு பொருட்களிலும் ரசாயன கலப்படம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி. இதை தவிர்க்க முடியாத ஒன்று ஆகும் .மனித வாழ்வியலில் பின்னி பிணைந்து விட்டது. இதற்கு ஏற்றால் போல் நாம் நம் உடலையும் பாதுகாக்கும் வழி வகைகளை மேற் கொள்ள வேண்டும்.
எமது உடலில் உள்ள நாடி, நரம்பு,சுரப்பிகள் இயக்கத்தை சீர் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும்.என்னவொரு ஆச்சரியம் என்றால் எமது உடலில் தோன்றும் 95 சதவீதமான நோய்களுக்கு மருந்து எமது உடலின் உள்ளே சுரக்கின்றது என்பது எத்தனை பேருக்கு புரியும்.
இதற்கு உரிய தீர்வுகளை அன்றைய காலகட்டத்தில்
சித்தர்கள்,யோகிகள்,ரிஷி மகான்களும் எமக்கு தந்து சென்றுள்ளனர்.
என்னவொரு முக்கிய விசயம் என்றால் தமிழ்க்கு உரித்தான கலைகளில் எம்மவர் நாட்டம் குறைவு.
வெளிநாட்டவர்களே இதை புரிந்து அதிக நாட்டம் கொள்கிறார்கள்.
இன்றே புரிந்து உணர்ந்து செயல்படுங்கள்!!!!!!!!!!!
ஓகக்கலை பள்ளி