திருமூலர் கணித்த ஆயுள் கணக்கு!!
என்றாவது உங்கள் சுவாசத்தை அவதானித்து இருப்பீர்களா ???????? நான் சொன்ன பிறகுதான் இப்பொழுது உங்கள் அவதானம் சுவாசத்திற்கு செல்கிறது அல்லவா?????? ஒரு மனிதன் ஒரு நாளைக்கு அவன் உள்ளெடுத்து வெளிவிடும் மூச்சுகளின் மொத்த எண்ணிக்கை 21600 ஆக இருந்தால் அவனின் ஆயுள் 120 வருடங்கள். குறிப்பாக சொல்ல போனால் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு எண்ணிக்கை……. என்றால் சற்று சிந்தித்து பாருங்கள்….. இன்றைய மனித சமுதாயத்தின் சராசரி ஆயுள் ஆனது 60 ஆக மட்டுபடுத்தபட்டுள்ளது என்பது தற்போது நாம் கண் கூடாக அவதானிக்கிறோம். தற்போதைய ஒரு மனிதனின் சராசரி ஆயுள் 60ஆக கணக்கிடப்பட்டுள்ளது எனும் போது ஒரு நிமிடத்திற்கு செலவழிக்கும் மூச்சுகளின் எண்ணிக்கை 30 ஆகும். ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால் இன்றைய மக்களின் வாழ்க்கை முறை இயற்கைக்கு மாறாக காணப்படுகிறது…….
* உணவு பழக்கம் வழக்கம்
*உடற்பயிற்சி இன்மை
*மன அழுத்தம்
*மனிதனின் அன்றாட இயல்பு நிலை( சொகுசு) போன்ற இயந்திரம் நிறைந்த வாழ்க்கையில் மனித சமுதாயம் ஆனது சிக்கி உடல் ,உள ரீதியாக ஆரோக்கியம் அற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்…
உடல் , உள ரீதியாக ஆரோக்கியம் அற்ற நிலையில் உள்ளவர்களின் மூச்சை சற்று அவதானித்து பாருங்கள் …. மூச்சு மிக வேகமாகவும் ஒரு நிமிடத்திற்கு செலவழிக்கும் மூச்சுகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும்…… இதை எவ்வாறு சரி செய்வது? ஒரு பிரச்சினை ஏற்படும் போது அதற்கான தீர்வும் சேர்ந்தே தோன்றுகிறது!! பதஞ்சலி முனிவர் சாதாரண மக்களின் வாழ்க்கை நலன் கருதி அஷ்டாங்க யோகத்தை வடிவமைத்தார். இவற்றின் படி நிலைகள் முறையே
1. இயமம்
2. நியமம்
3. ஆசனம்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரனை
7. தியானம்
8. சமாதி….
பதஞ்சலி முனிவரின் யோக சூஸ்திரத்திற்கு அமைய மூச்சு பயிற்சி ஆனது ஆசன பயிற்சி பின்பே …….. எனவே யோகாசன பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் மூச்சு ஆனது இயல்பாக கட்டுபாட்டுக்குள் வரும்……. யோகா பயிற்சி மற்றும் தியான பயிற்சி மேற்கொள்பவர்கள் வயதில் முதுமை அடைந்தாலும் உடல் எப்பொழுதும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்………. இதற்கு காரணம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு நிமிடத்தில் செலவழிக்கும் மூச்சுகளின் எண்ணிக்கையை குறைத்து ஆயுளை அதிகரித்து கொள்கின்றனர் என்பது முற்றிலும் நிதர்சனமான உண்மை……. அனைத்து முனிவர்கள், சித்தர், யோகிகள்,சூபிகள் சுவாசத்தை மையபடுத்தியே தமது பாடல்களில் சூட்சுமத்தை தெரிவித்து இருப்பார்கள்…….. மூச்சில் ஆழமான புதையல் அடங்கி உள்ளது என்பதை உணருங்கள்…….
ஓகக்கலை பள்ளி