எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சுமார் 19 தடவைகள் தங்களை ஏமாற்றியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பார்வீதியின் குறுக்கு வீதியை புனரமைக்கும் பணிகள் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்டன.
கம்பெரலிய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டு இந்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன்போது இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சினித்தம்பி யோகேஸ்வரன், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ,19 தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களை ஏமாற்றியதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷ காலத்திற்கு காலம் மாறிமாறி பேசி இரட்டை வேடம்போடுவதாக சுட்டிக்காட்டியதுடன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் எந்த கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசவில்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.