சீனாவில் ஐஸ்கிரீமிற்காக இளம்பெண்ணொருவர் தனது காதலரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடியொன்று, ஜூமாடியன் நகரில் உள்ள சந்தைத் தொகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஐஸ்கிரீம் வாங்கித் தருமாறு குறித்த இளம் பெண் கோரியுள்ளார்.
ஆனால் பெண்ணின் காதலரோ “நீ ஏற்கனவே உடல் பருமனாக இருக்கிறாய். இன்னும் ஐஸ்கிரீம் வாங்கி உண்ண விரும்புகிறாயா?” என கூறி மறுப்பு தெரிவித்தார்.
ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததோடு தனது உடல் பருமன் குறித்து கேலி செய்ததால் ஆத்திரம் அடைந்த போதிலும், அவர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முன்னோக்கிச் சென்றார்.
பின்னர் காதலரை ஒரு இடத்தில் நிற்கவைத்துவிட்டு, அங்குள்ள கடையொன்றிற்குள் சென்று 2 கத்தரிக்கோல்களை எடுத்து வந்தார்.
பெண்ணின் காதலர் “எதற்காக கத்தரிக்கோல்?” என கேட்ட அடுத்த நொடியே அவரது வயிற்றில் 4 முறை சரமாரியாக குத்தினார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை சந்தையில் இருந்த ஏனையவர்கள் மீட்டு அவரச நோயாளர் காவு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் இடை வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் காதலரை குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற இளம் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.