மஹிந்த அணியின் முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பீ.ஹெரிசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்படும் கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட உறுப்பினர்கள் இவ்வாறு இணைந்துக்கொள்ளவுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.