ஐக்கிய தேசிய கட்சி தனது வேட்பாளரை தெரிவு செய்வதற்கு முன்னதாக எமது பயணத்தை நிறைவுபடுத்திவிடுவோமென எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான மாநாடு பொது ஜன பெரமுன முன்னணியினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மாலைதீவிலும், இன்னுமொருவர் குருநாகலையிலும் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்களில் ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே எமது பயணத்தை நாங்கள் நிறைவுசெய்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.