எஸ்ட்ராசெனகா தடுப்பூசி வழங்களின் பின்னரான பக்கவிளைவுகள் தொடர்பில், இந்தியா ஆழமான மீளாய்வை அடுத்தவாரம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இரத்தம் உறைதல் தொடர்பான பக்கவிளைவுகள் எவையும் இதுவரையில் பதிவாகவில்லை என இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த நாட்களில் இரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் பதிவாகுவதாக தெரிவித்து டென்மார்க், நோர்வே உள்ளிட்ட நாடுகள் எஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளன.
அத்துடன் தாய்லாந்தும் தமது தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளை பிற்போட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
பக்கவிளைவுகள் தொடர்பாக முழுமையாக கண்காணிக்கப்படுவதாக இந்தியாவின் கொவிட்-19 தடுப்பு செலணியின் உறுப்பினரான என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரையில் 28 மில்லியன் எஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை சீரம் மருத்துவ நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகின்றன.
இதேநேரம், சுமார் 70 நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.