என்னைக் கொல்வதற்கு மலேசியாவிலிருந்து சினைப்பர் துப்பாக்கி கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் எனது பாதுகாப்பை உடனடியாக அதிகரியுங்கள் என ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, வடக்கை சேர்ந்த தீவிரவாத குழுவொன்நு தன்னை கொல்ல முயற்சிப்பதாக புலனாய்வுத்துறை தனக்கு தகவல் தந்துள்ளதாக அவர் இந்த முறைப்பாட்டின் போது தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்காக விசேட சினைப்பர் துப்பாக்கியொன்று மலேசியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு மட்டுமல்ல கருணா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் ஆபத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளதுடன், இப்படியொரு புலனாய்வு எச்சரிக்கை தமக்கு வந்திருந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலரும் ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபயவின் முறைப்பாட்டையடுத்து, அவரது பாதுகாப்பை உறுதி செய்வதுடன், உடன் விசாரணையை ஆரம்பிக்கும்படி, பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு ஜனாதிகதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த எச்சரிக்கையையடுத்து தனது பாதுகாப்பிற்கு தனியார் பாதுகாப்பு பிரிவொன்றை கோட்டாபய ஒப்பந்தம் செய்துள்ளார். அண்மையில் அவர் கண்டிக்கு பயணம் மேற்கொண்டபோது, யாரும் கோட்டாவை நெருங்காத விதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்த தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஏற்படுத்திருந்தது.
தேர்தல் நெருங்கும் நெரத்தில் இப்படியான குற்றச்சாட்டை வைத்து கோட்டபாய பெரும்பான்மை மக்களிடமிரந்து அனுதாப வாக்குகளை வாங்க முயல்கிறதாக மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன்,இது தேர்தலுக்கான ஒருவகை நடவடிக்கையாகவும் இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.