இலங்கையில் எதிர்வரும் நாட்களில், நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி சூரியன் இவ்வாறு உச்சம் கொடுக்கும் என இலங்கை காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அதற்கமைய சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகளிற்கு அருகிலுள்ள நகரங்கள் பின்வருமாறு:
ஓகஸ்ட் 29, 12:12 நண்பகல்- திருக்கேதீச்சரம், வடக்கண்டல், பாலமோட்டை, பரக்ரமபுர, கல்லரவ.
ஓகஸ்ட் 30: 12:12 நண்பகல்- குதிரமலை முனை, மதவாச்சி, ரத்மல்கஹவேவ, குலுமிவகட, ஃபவுல் பொயிண்ட்.
ஓகஸ்ட் 31, 12:11 நண்பகல்- முசல்பிட்டி, இஹாலா புளியங்குளம், தம்புத்தேகம, பெரியகுளம், ஹம்மிலேவ, மெடிரிகிரியா, கொம்பனாச்சி.
செப் 1, 12:11 நண்பகல் – ஒட்டப்பனை, கோஹொம்பகஸ்வேவ, பலுகஸ்வே, தலடகம, மஹோ, தலகிரியகம, யக்குரே, கிலங்குப்பலை, புன்னைக்குடா.
செப் 2, 12:11 நண்பகல் – மகாவேவ, அலலுவ, கடஹபோல, உஹுமிய, உதகம, எல்லேகோட, கல்முனை, பெரியநீலாவணை.
செப் 3, 12:11 நண்பகல்- ஜா-எல, கணேமுல்ல, அங்கூருவெல்ல, தம்பகொல்ல, அம்பன்போருவ, கோட்டகொட.
செப் 4, 12:10 நண்பகல்- நல்லூருவ, பெல்லாபிட்டி, போத்தல, கஹவத்த, மால்வால, கதுருகல்வட்ட, கொஸ்கமா (இரத்தினபுரி மாவட்டம்), கொங்கெட்டியா, ஹபேசா, டோம்பகஹவேல.
செப் 5, 12:10 நண்பகல்- உரகஸ்மன்ஹந்திய, ஓமட்டா, டெனியா, பனமுரே, எம்பிலிபிட்டிய, பல்லேபஹிராவா, வெலிவேவா, உதமட்டா, லுனுகம்வேஹெர.
செப் 6 – அம்பலங்கொட, பித்துவாலா, தல்கஸ்வேலா, விராபனா, மொரவக்க, தபரெல்லா, பெடிகன்டோட்ட, விராவில, யோதகாண்டிய.
செப் 7- மெகல்லே, தெலிஜ்ஜவில, யதியான, வாலகந்த, கும்பலதேனிய மற்றும் தங்கல்ல.
மேற்கூறப்பட்ட இடங்களில் குறித்த தினங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.