திருகோணமலை இந்து மயானத்தில் லண்டன் கனகதுர்கையம்மன் ஆலயத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட தகனச்சாலை, இன்று காலை 9.00மயணியளவில் கனகதுர்கையம்மன் ஆலய அறங்காவலர்சபையின் ஸ்தாபக உறுப்பினர் சபா அபேயலிங்கம் அவர்களால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது
இவ்வாறே லண்டன் யோகராஜா நிசாந் அவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு தகனச்சாலையை முன்னாள் நகரசபைத்தலைவர் கே.செல்வராசா திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ணசிங்கம்.முன்னாள் கிழக்குமாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, நலன்புரிச்சங்க திட்ட இணைப்பாளர் பத்மநாதன், கைலைவாசன் உள்ளிட்டபலரும் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக நகரில் உள்ள மயானத்தில் இவ்வாறான நிலையம் இல்லாதது பெரும் குறையாகவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை திருகோணமலை இந்து மயான தகன நிலையத்திறப்பு விழாவிற்கு வந்த பிரதிநிதிகள் வீதியில் நிற்க வேண்டிய துர்பாக்கிய நிலை இன்று காலை 8.30 மணியளவில் ஏற்பட்டது.
இந்து மயானத்தைப்பராமரிப்பதாக கருதப்படும் இந்து மன்ற உறுப்பினர் எனச்சொல்லப்படும் எஸ்.விஜயசுந்தரம் இந்த திறப்பு விழவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விழாவிற்கு வருகைதந்த பிரதிநிதிகளை உள்நுழைய விடாது மயானக்கதவை பூட்டியதால் இந்நிலமை ஏற்பட்டதாகவும், எனினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் லண்டன் கனக துர்கையம்மன் ஆலய நிருவாகத்தினர் ஆகியோர் பிறிதொரு கதவால் அழைத்துச்செல்லப்பட்டு பின்னர் இந்நிகழ்வு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.