இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் 2ஆம் நாளில் சுற்றுச்சூழல், காலநிலை, பெருங்கடல் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றங்கள் குறித்து பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மாநாட்டுக்கு இடையே ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினர் இல்லை என்றாலும், நட்பு நாடு என்ற ரீதியில் மாநாட்டுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.