பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சனிக்கிழமை பூட்டான் நாட்டிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது, பூடான் நாட்டு பிரதமர் லோடே ஷெரிங்கை மோடி சந்தித்து பேச உள்ளதுடன், பூடான் நாட்டின் 4 வது மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சக்கையும் மோடி சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இந்த சுற்றுப்பயணத்தின்போது, விண்வெளி, நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பயணம் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் எனவும் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.