உடலுறுவில் ஈடுபடுவதற்கு முன்பு பாலியல் தூண்டலை பெற சில வகை ட்ரிக்ஸ்களை முயற்சி செய்யலாம். இந்த ட்ரிக்ஸ்கள் உங்களுக்கு உடலுறவின் போது உச்சநிலையை அடைய உங்களுக்கு உதவும்.
ஒரு பெண்ணை புணர்ச்சி அடைய வைப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. திரைப்படங்களில் காட்டுவதைப் போல மோலோட்டமான செயல்கள் ஒரு பெண்ணை புணர்ச்சி அடைய வைப்பதில்லை. இதனால் என்னவோ உடலுறுவின் போது நிறைய பெண்கள் உச்சத்தை அடைவதில்லை என்று கூறுகின்றனர். இன்றளவும் பெண் புணர்ச்சி குறித்த விஷயங்கள் மர்மமாகவே உள்ளது. அதை யாரும் ஆழமாக ஆராய முற்படுவதில்லை.
புணர்ச்சி என்பது என்ன?
அது ஒரு பாலியல் தூண்டலா அல்லது பாலியல் மறுமொழியா போன்ற கேள்விகள் மக்களிடையே இருக்கத்தான் செய்கிறது. பொதுவாக பாலியல் தூண்டல் என்பது நான்கு உற்சாக நிலைகளைக் கொண்டுள்ளது என்கிறார்கள் பாலியல் நிபுணர்கள். அவை யாவது உற்சாகம் அடைதல், விளையாட்டு, புணர்ச்சி அடைதல் மற்றும் தீர்மானம். அடிப்படையில் பாலியலில் ஈடுபடுவதற்கு முன்பு பரவச நிலையை அடைய வேண்டும்.
ஆய்வுத் தகவல்கள்
ஆய்வின் படி சில நேரங்களில் புணர்ச்சி என்பது உடல் பாகங்களில் தூண்டும் பரவசமாக உள்ளது. குறிப்பாக பிறப்புறுப்பு பகுதியில் தொடரும் போது விளையாடும் போது பெண்கள் புணர்ச்சி நிலையை அடைகின்றனர். ஆனால் இது எல்லா பெண்களுக்கும் பொருந்தாது.
தவறான தீண்டுதல் மன அழுத்தம் உண்டாக்குமா?
ஒரு வேளை ஒரு பெண்ணை புணர்ச்சி அடைய வைக்கும் போது சரியான இடத்தை தேர்ந்தெடுக்காமல் தவறான ஒன்றை நீங்கள் தீண்டினால் அதனால் புணர்ச்சி எழும்புவதில்லை. மன அழுத்தமே ஏற்படக் கூடும். நிறைய பெண்கள் உச்சநிலையை அடையாததற்கு இந்த மன அழுத்தமும் காரணமாக அமைகிறது. மன அழுத்தம் உளவியல் ரீதியான பாதிப்பை உண்டாக்கி உங்களுக்கு இன்பத்தை கொடுக்காமல் போகலாம்.
எனவே ஒரு பெண்ணிற்கு புணர்ச்சியை ஏற்படுத்த கீழ்க்கண்ட 3 தந்திரங்களை செய்யலாம், இதன் மூலம் எளிதில் உச்சநிலையை அடைய முடியும் என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள்.
முன் விளையாட்டுகள்
உடலுறவு கொள்ளும் போது உடனேயே உடலுறவு கொள்வதில் ஈடுபடக் கூடாது. கொஞ்சம் முன் விளையாட்டுகளில் ஈடுபடுவது பெண்களுக்கு உச்ச நிலையை அடைய உதவி செய்யும். எனவே பாலியலில் ஈடுபடும் போது உற்சாகமான விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். இப்படி விளையாடும் போது உங்க மூளையில் பெரோமோன்கள் என்ன ஹார்மோன் உந்தப்படும் என்று ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கிறது.
உடலுறவு என்பது ஊடுருவல் மட்டும் அல்ல. அதை நீங்கள் முன் விளையாட்டுகள் போன்ற மசாலாக்கள் கலந்து கொடுக்க வேண்டும்.
கெகல் உடற்பயிற்சிகள்
கெகல் பயிற்சிகள் உங்க இடுப்பு தசையை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆய்வின் படி புணர்ச்சியை அதிகரிக்கவும் தூண்டவும் உதவுகிறது.
எனவே இந்த பயிற்சிகளை உங்க வீட்டிலேயே நீங்கள் செய்து வரலாம். பிரிட்ஜ் போஸ், ஜம்பிங் ஜாக்ஸ் மற்றும் குந்துகைகள் போன்றவைகள் நல்ல பலன் தரும்.
எரோஜெனஸ் பகுதிகளைத் தூண்டுதல்
பெண்களை புணர்ச்சிவசப்படுத்தும் எரோஜெனஸ் பகுதிகளைப் பற்றி ஆண்கள் அறிந்திருக்க வேண்டும். இது குறித்து மேற்கொண்ட ஆய்வின் படி கழுத்து, காதுக்குப் பின்னால் போன்ற எரோஜெனஸ் புள்ளிகள் போன்றவை பிறப்புறுப்புகளில் புணர்ச்சியைத் தூண்டும் விளைவை செய்கின்றன என்கிறது. மேலும் இது ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
எனவே உடலுறுவின் போது அந்த நேர இன்பத்தை அனுபவியுங்கள். காதல் முன் விளையாட்டுகளில் ஈடுபடுவது உங்களை பரவசப்படுத்தும். இந்த மூன்று விஷயங்களும் உங்க பாலியல் வாழ்க்கைக்கு சுவை ஊட்டும்.