ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நாடாளுமன்றக்குழுவின் முன் முன்னிலையாவதற்கு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து ஜனாதிபதி சிறிசேன மீது தெரிவுக்குழு விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் விசாரணைக்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
இதேவேளை, தெரிவுக்குழு விசாரணைகள் ஜனாதிபதியிடம் நடத்தப்படும் விசாரணையுடன் முடிவுக்கு வருகின்றன.
இந்நிலையில் இம்மாத இறுதியில் அறிக்கை சமர்பித்து விசாரணைகளை முடிவுறுத்துவதற்கும் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.