ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறையில் வைத்து இவர்கள் இருவரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினமன்று தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பினால் இலங்கையிலுள்ள கத்தோலிக்க தேவலாயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் தற்கொலைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் பலர் பலியானதுடன், நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த அமைப்பை சேர்நதவர்களை தேடும் முயற்சிகளை இலங்கை பொலிசார் மேற்கொண்டிருந்ததுடன், அவர்களில் பலரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், சஹ்ரானிடம் நுவரெலியாவில் வைத்து பயிற்சி பெற்றதாக தெரிவித்து இருவர் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.