திருகோணமலை ஆத்திமோட்டை சாம்பல் தீவு ஆறாம் வட்டாரத்தை சேர்ந்த சீலன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இறந்தவர் 21 வயதான நபரெனவும், இவருக்கு கல்யாணமாகி ஒரு ஆண் குழந்தையும் உண்டு எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, எனினும் இந்த சம்பவத்தினால் குறித்த நபரின் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.