இன, மத வேறுபாடற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம் இளைஞர்களின் சக்தி எனும் தொனிப்பொருளில் திருகோணமலையில் செயலமர்வு இடம்பெற்றது.
சீ. ஈ. ஜே. அமைப்பின் நிதி அனுசரணையுடன் கந்தளாய் சக்தி அமைப்பினால் இன்று (25) செயலமர்வு ஆரம்பமானது.
திருகோணமலை வவுனியா மற்றும் மொனறாகல மாவட்டங்களைச் சேர்ந்த எண்பதுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
சமூக நலனுக்காக இளைஞர்களின் பலம் இளைஞர்களின் சக்தி அமுல்படுத்துவது எவ்வாறு என்ற அனுபவப் பகிர்வுகளை இக்கலந்துரையாடலில் மூலம் பகிரப்பட்டது.
அத்துடன் சமூகங்களிடையே இன நல்லுறவை வழுவூட்டுவது பற்றியும், இளைஞர் யுவதிகளிடம் இன ஐக்கியத்தை எவ்வாறு வளர்ப்பது பற்றியும் இதன்போது தெறி ஊட்டப்பட்டது.
இதேவேளை மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளை மாவிலாறு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் பிரபலம் வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆரம்ப காலத்தில் சமூக நல்லிணக்கம் எவ்வாறு பேணப்பட்டது. தற்போதைய நிலைமை பற்றியும் இதனை இளைஞர்களின் ஊடாக சமூகத்திற்கு எவ்வாறு தெளிவு படுத்தலாம் போன்ற விடயங்கள் இதில் ஆராயப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இந்நிகழ்வில் கந்தளாய் சக்தி அமைப்பின் பணிப்பாளர் சத்துராணி மற்றும் வளவாளரான நஸ்ரின் டிலானி மற்றும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டனர்.