பொலநறுவை இராசதானி (1017 – 1070)
பொலநறுவையிலிருந்து கோட்டே வரையான இராசதானி 1017 – 1070, 1070 – 1232 தம்பதெனியா 1232 – 1272, யாப்பகூவ 1272 – 1293, குருநாகல் 1293 – 1340, கம்பளை 1341 – 1374 மற்றும் கோட்டே (சீதாவாக்க 1521 – 1593) 1372 – 1597. கி.பி 1017 – 1070 காலத்தில் இலங்கையின் “வட பகுதியை” ஆட்சிபுரிந்த சோழ மன்னர்களும், அநுராதபுர இராசதானிக் காலகட்டத்தின் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட “கஹவனுவுக்கு” சமமான கஹவனுவை வெளியிட்டுள்ளனர். ஆயினும் அது சொரசொரப்பான விளிம்புகளைக் கொண்டிருந்தது. தயாரிப்பின் பொருட்டு செப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நாணயங்கள் இவற்றை வெளியிட்ட நேரம் ஆட்சியிலிருந்த மன்ன்னின் பெயரைக் கொண்டிருந்தமை இதில் காணப்பட்ட விசேட அடையாளமாகும். ஆட்சியாளரின் பெயருடன் நாட்டில் வெளியிடப்பட்ட முதலாவது நாணயம் இதுவாகும்.
பொலநறுவை தொடக்கம் கோட்டை இராச்சியம் வரை பயன்படுத்தப்பட்ட குத்திகள்
மேசா குத்திகள்
தம்பதெனிய இராச்சியக் குத்திகள்/ மத்திய கால நாணயங்கள்
சிங்க நாணயங்கள்
சேது நாணயங்கள்
நாணயங்களிலுள்ள அரசர்கள் பெயர்கள்:
இராசரட்டை | நிசங்கமல்ல |
இராசராசன் | கொடகங்கா |
ராஜேந்திரதேவன் | லீலாவதி |
விஜயபாகு I | சகாசமல்லா |
பராக்கிரமபாகு I | தர்மஅசோகா |
மோசா குத்திகள்
சோழர்களின் ஆதிக்கத்தை முறியடித்து நாட்டை ஒரு கொடியின் கீழ் கொண்டுவந்ததுடன் பொலனறுவை இராசதானியை ஆரம்பித்து வைத்த முதலாவது விஜயபாகு மன்னரும் ‘கஹவனுக்களை’ வெளியிட்டுள்ளார். அவர் நாணயங்களை தயாரிக்;கின்றபோது அவற்றின் மேல் தமது பெரையும் பொறித்தார். இதன்படி நாணயங்களில் தமது பெயரைப் பொறித்து அவற்றை வெளியிட்ட முதலாவது சிங்கள மன்னர் முதலாவது விஜயபாகு மன்னராவார். அந்த நாணயம் ‘மஸ்ஸ’ என அழைக்கப்பட்டது.
பொலனறுவைக் காலகட்டத்தின் ஆரம்பத்திலிருந்து தம்பதெனிய காலகட்டத்தின் இறுதி வரையிலும் மன்னரின் பெயரைப் பொறித்து நாணயங்களை வெளியிடுகின்ற இந்த நடைமுறை செயற்பட்டு வந்தது. பொலனறுவை இராசதானி காலப்பகுதிக்குரிய நாணயங்கள், அவற்றின் தயாரிப்புக்குப் பொறுப்பான மன்னரின் பெயர் ‘நாகரி’ எழுத்துக்களில் அல்லது ‘நாகரி’ உருக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இதன்படி, விஜயபாகு மன்னனின் பெயர் ஸ்ரீ விஜயபாகு எனவும், பராக்கிரமபாகு மன்னின் பெயர் ஸ்ரீ பராக்கிரமபாகு எனவும், வோடகங்க என்பது ஸ்ரீ வோடகங்கதேவ எனவும், லீலாவதீ இராணி என்பது ஸ்ரீ ராஜ லீலாவதீ எனவும், சஹஸ்ஸமல்ல மன்னன் என்பது ஸ்ரீ சஹஸ்ஸமல்ல எனவும், தர்மாசோக என்பது ஸ்ரீ தர்மாசோகதேவ எனவும், புவனேகபாகு என்பது ஸ்ரீ புவனேகபாகு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் நிஷங்கமல்ல மன்னரின் பெயர் ஸ்ரீ கலிகலகேஜ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜயபாகு மற்றும் பராக்கிரமபாகு மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களில் அவர்களது பெயர்களைப் பொறிக்கின்றபோது அவை எத்தனையாவது விஜயபாகு மன்னருடைய காலத்தில் அல்லது எத்தனையாவது பராக்கிரமபாகு மன்னருடைய காலத்தில் வெளியிடப்பட்டதென்பது குறிப்பிடப்படவில்லை. நாகரீ எழுத்துக்களில் பெயர் மாத்திரம் ஒரே விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று லீலாவதீ இராணியும் மூன்று காலகட்டங்களில் ஆட்சி புரிந்துள்ள போதிலும் அவரால் வெளியிடப்பட்ட நாணயங்களும் மேற்படி காலகட்டங்களில் எந்தக் காலத்தில் வெளியிடப்பட்டதென்பதை இனங்காண்பதற்கு முடியாதுள்ளது.
பொலனறுவை இராசதானிக் காலத்தில் சோழ மன்னர்களின் முதலாவது ராஜராஜன் (கி.பி. 985 – 1016), முதலாவது ராஜேந்திரன் (கி.பி. 1012 – 1044) மற்றும் முதலாவது ராஜாதிராஜா (கி.பி. 1018 – 1054) ஆகியோரால் வெளியிடப்பட்ட நாணங்களும் பாண்டிய மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு மேலதிகமாக, சீனாவின் சுங் வம்சத்தின் மன்னர்களது நாணயங்களும் அரேபிய நாணயங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளமை மூலம் அநுராதபுர இராசதானி காலகட்டத்தைப் போன்றே பொலனறுவை இராசதானி காலகட்டத்திலும் இலங்கை சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தமை தெளிவாகின்றது.

தம்பதெனிய குத்திகள்/ மத்திய கால நாணயங்கள்
அநுராதபுர இராசதானிக் காலகட்டத்தின் இறுதிக் காலத்தின் தயாரிப்பொன்றாகக் கருதப்படுகின்ற தங்க ‘கஹவனு’ பொலனறுவை காலகட்டத்தில் பிரவேசிக்கின்றபோது செப்பு நாணயமாக மாறியது. எவ்வாறாயினும், பொலனறுவை காலகட்டத்தின் ஆரம்பத்திலிருந்து தம்பதெனியா காலகட்டம் வரை பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் மத்திய கால நாணயங்களாக (தம்பதெனியா) அழைக்கப்படுகின்றன. ‘தம்பதெனிய மஸ்ஸ’ எனக் குறிப்பிடப்படுவது பொலனறுவை இராசதானி காலகட்டத்தில் வெளியிடப்பட்ட மஸ்ஸ நாணயத்தைப் போன்றதாகும். ‘சிங்கள மஸ்ஸ’ எனக் குறிப்பிடப்படுவதும் இதே நாணயமாகும்.
இந்த நாணயங்களில் உள்ளடங்கியுள்ள உருவப் படங்கள் அநேகமாக அநுராதபுர காலகட்டத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் உள்ளடங்கியுள்ள உருவங்களுக்கு பெரும்பாலும் ஒத்தவையாகக் காணப்படுகின்றன. நாணயத்தின் ஒரு பக்கத்தில் ‘தோதியைப்’ போன்றதொரு ஆடை அணிந்த மனிதன் வலதுபுறம் நோக்கியவாறு உள்ள விதத்தில் உருவமொன்று பொறிக்கப்பட்டுள்ளது. செப்பினால் தயாரிக்கப்பட்ட ‘மஸ்ஸ’ நாணயத்திலும் அதே உருவத்தைக் காணக்கூடியதாக உள்ளது. நாணயத்தின் மறுபக்கத்தில் அமர்ந்த நிலையிலுள்ள ஒரு உருவம் காணப்படுகின்றது. அதேபோன்று நாணயத்தின் இருபுறத்திலும் பல்வேறு விதத்திலான அடையாளங்களும் குறியீடுகளும் காணப்படுகின்றன.

சிங்க நாணயங்கள்
பராக்கிரமபாகு மன்னரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நாணயத்தில் சிறப்பியல்பானதொரு தன்மையைக் காணக்கூடியதாக உள்ளது. அது அந்த நாணயத்தின் முகப்புப் பகுதியில் காணப்படுகின்ற நின்ற நிலையிலுள்ள மனித உருவத்திற்கு வலது பக்கத்தில் சிங்கத்தின் உருவமொன்று பொறிக்கப்பட்டுள்ளமையாகும். அந்த நாணயங்கள் “சிங்க நாணயங்கள்” என அழைக்கப்பட்டன. மன்னர்களின் பெயர்களைப் பொறித்து வெளியிடப்பட்ட நாணயங்களில் இறுதி நாணயமாக காணப்படுவது இதுவாகும்.
சேது நாணயம்
இந்த நாணயங்கள் 13ஆவது நூற்றாண்டளவில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஆட்சிபுரிந்த ஆரியச்சக்கரவர்த்தி மன்னராலேயே வெளியிடப்பட்டுள்ளன. இது “தம்பதெனிய மஸ்ஸவைப்” பிரதிபண்ணியதொரு நாணயமாகும். நாணயத்தின் ஒரு பக்கத்தில் மாடொன்றின் உருவமும் மறுபக்கத்தில் “தம்பதெனிய மஸ்ஸ” நாணயத்தில் காணப்படுகின்ற நின்ற நிலையிலுள்ள மனிதனின் உருவத்தைப் போன்றதொரு உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயம் செப்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் அதிகமாக நல்லூர், திருநெல்வேலி, கோப்பாய், சண்டிலிப்பாய், சுந்தூர். நாகர்கோவில் மற்றும் மாங்குளம் ஆகிய பிரதேசங்களிலிருந்தே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை நாணயத்தின் வரலாறு தொடரும் ………
(நன்றி – இலங்கை மத்திய வங்கி)