அனுராதபுர யுகம்
அனுராதபுர காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குத்திகள்
- கஹபான
- சுவாஸ்திக நாணயக்குத்தி
- பிடரிமயிர் இல்லாத சிங்க நாணயக் குத்திகள்
- லக்ஷ்மி பளிங்குக்கல்
- கஹவானு அல்லது லங்கேஸ்வரர் நாணயக்குத்தி
- வெளிநாட்டு நாணயக்குத்தி
அனுராதபுர இராசதானி (கி.மு. 377 – 1017)
அதன் தலைநகரத்தின் பெயரினால் அழைக்கப்படும் அனுராதபுர இராசதானி பண்டய இலங்கையில் நிறுவப்பட்ட முதலாவது இராசதானியாக விளங்கியது. கி.மு 377இல் மன்னன் பண்டுகாபயவினால் நிறுவப்பட்ட இந்த இராசதானி காலத்திற்குக் காலம் ஆங்காங்கே சுதந்திரமான ஆட்சிகள் தோன்றினாலும் கூட நாடுமுழுவதும் அதன் அதிகாரம் பரவிக் காணப்பட்டது. அநுராதபுர இராசதானிக் காலகட்டத்தின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நாணயப் பயன்பாடு பற்றிய அநேகமான தகவல்கள் கல்வெட்டுக்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. அக்காலத்தில் நாணயத் தயாரிப்பு மற்றும் விநியோகம் மிகவும் முறைசார்ந்த அடிப்படையில் நடைபெற்றுள்ளதென்பது இதன் மூலம் தெளிவாகின்றது. நாணயத் தயாரிப்புக்குப் பொறுப்பான பணிப்பாளர் அக்காலத்தில் “ரூபடக” என அழைக்கப்பட்டுள்ளார் (பெரியகடு விஹாரை கல்வெட்டு). அதேபோன்று தயாரிக்கப்பட்ட நாணயங்களை அங்கீகரிப்பவர் “ரூபவார” என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளார் (கதுறுவெவ கல்வெட்டு).
கஹபான

மிகப் பழைய நாணயக் கூறு என இத்தீவில் அறியப்பட்டது கஹபான ஆகும். இவை சமஸ்கிருதத்தில் புராண எனவும் ஆங்கிலத்தில் எல்டிங்கஸ் எனவும் அழைக்கப்பட்டன. இவை பொதுவாக துளை அடையாளமிடப்பட்ட குத்திகள் என அறியப்பட்டன. குத்தியின் ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலோ ஓர் அடையாளக் குறி குத்தப்பட்டுள்ளது. கஹபான பண்படுத்தப்பட்ட உலோகத் தகட்டில் கீறுகள் ஏற்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டதென நம்பப்படுகின்றது. அறியப்பட்ட அத்தகைய குத்திகள் வட்டம், சதுரம், செவ்வகம். நீண்ட செவ்வகம் போல பல வடிவங்களை உடையது. அவற்றின் நிறை மூலைகளில் வெட்டப்படுவதன் மூலம் சரி செய்யப்பட்டுள்ளன. கஹபானவின் லோகம் பெருமளவுக்கு வெள்ளியாகவே இருந்தது.
இதற்கமைய, அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களில் அரச முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. இந்த நாணயங்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கைமாறும் போது பல்வேறு வகையான தனித்துவமான அடையாளங்கள் நாணயத்தின் மீது குறிக்கப்பட்டன. இதனால், இந்நாணயங்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட பல அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒரு நாணயத்தில் ஏறக்குறைய 20 அடையாளங்கள் இடப்பட்டுள்ளன. சூரியன், சந்திரன், யானை, நாய், மரம் ஆகியன அத்தகைய அடையாளங்களில் சிலவாகும். இத்தகைய 500 க்கும் மேற்பட்ட குறியீடுகள் ஷகஹபன| நாணயத்தின் மீது இடப்பட்டுள்ளதென்பது இனங்காணப்பட்டுள்ளது. ஆயினும் இந்த நாணயங்கள் இந்நாட்டில் தயாரிக்கப்பட்டவையல்ல இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நாணயங்களாகும் என்றே நம்பப்படுகின்றது. இவை சர்வதேச வர்த்தகத்தின் ஊடாக இந்திய வணிகர்களின் மூலம் இந்நாட்டிற்குக் கிடைத்துள்ளன. இந்த நாணயங்களைப் பின்பற்றியே இந்நாட்டில் ‘கஹபன’ தயாரிக்கப்பட்டுள்ளன.
கி.மு. 3 வது நூற்றாண்டிலிருந்து கி.பி. 1வது நூற்றாண்டு வரை ‘கஹபன’நாணயங்கள் எமது நாட்டில் பயன்பாட்டில் இருந்துள்ளன. அநுராதபுரம், தொலுவில, வெஸ்ஸகிரியா, சீகிரியா, புன்னாபொல, தெதிகம, மினுவன்கொடை, உடவளவை, அம்பலாங்கொடை, திஸ்ஸமகாராமய, வல்லிபுரம், கந்தரோடை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாந்தோட்டம், பதவியா, திருகோணமலை ஆகிய பல பிரதேசங்களிலிருந்து இந்த வகையைச் சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுவாஸ்திக நாணயக்குத்திகள்



மேலே விபரிக்கப்பட்டுள்ள, பல அடையாளங்களைக் கொண்ட ‘கஹபன’ நாணய வகைகளுக்கு மேலதிகமாக அநுராதபுர காலகட்டத்தில் மேலும் பல நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. யானை மற்றும் ஸ்வஸ்திக்க அடையாளமிடப்பட்ட நாணயங்கள் அவற்றில் ஒரு வகையாகும். அது சிறிய செப்புக் காசாகும். இந்த நாணயங்களை தயாரிக்கின்றபோது ‘கஹபன’ நாணயத்தில் காலத்திற்குக் காலம் குறிக்கப்பட்டிருந்த அடையாளங்களில் ஒருசிலவற்றைத் தெரிவு செய்து இலச்சினையொன்றுக்கு எடுத்து அச்சிடுதல் நடைபெற்றுள்ளதென்பதை காணக்கூடியதாக உள்ளது.
நாணயத்தின் ஒரு பக்கத்தில் நடக்கும் யானையொன்றின் உருவத்தையும், அரை பிறை அடையாளங்கள் மூன்றின் மூலம் தயாரிக்கப்பட்ட தாது கோபுரமொன்றையும், ஸ்வஸ்திகவையும், சதுரக் கோட்டுடன் கூடிய மூன்று கிளைகளைக் கொண்ட அரச மரமொன்றையும் காணக்கூடியதாக உள்ளது. மறு பக்கத்தில் ஸ்வஸ்திகவும், திரிசூலத்தின் அடையாளமொன்றும் தாது கோபுரத்தின் அடையாளமொன்றும் உள்ளடங்கியுள்ளது. எவ்வாறாயினும் நாணய அலகொன்றாக நோக்குகின்றபோது இந்த நாணயமும் ‘கஹபன’ வகையைச் சேர்ந்த நாணயமொன்றாக இருக்கலாம்.
பிடரிமயிர் இல்லாத சிங்கக் நாணயக்குத்திகள்

இந்த நாணயம் செப்பு உலோகத்திலிருந்தே தயாரிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் சிங்க உருவம் காணப்படுகின்றது. மறு பக்கத்தில் சிறிய மூன்று அல்லது நான்கு புள்ளிகள் காணப்படுகின்றன. மேற்படி புள்ளிகளின் மூலம் நாணயத்தின் பெறுமதி காட்டப்பட்டுள்ளதென கருதலாம். இந்த நாணயத்தின் விட்டம் ½ – ¾ அங்குலங்களுக்கிடையில் காணப்படுவதோடு நிறை அண்ணளவாக 15 – 40 கிறேன்ஸ் ஆகும்.
இந்நாணயம் கி.பி. 3 – 4 ஆம் நூற்றாண்டுகளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம் அகழ்வுகளின்போதும் வட பிராந்திய அகழ்வுகளின் போதும் இந்த வகையைச் சேர்ந்த நாணயங்களைக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
லக்ஷ்மி பளிங்குக்கல்

கி.மு. 3 – கி.பி. 8 வது நூற்றாண்டு போன்றதொரு மிகப் பண்டைய காலத்திலேயே பெண்ணின் உருவத்துடன் கூடிய நாணயங்கள் முதற் தடவையாக இலங்கையில் சுற்றோட்டத்தில் காணப்பட்டன. நாணயங்களின் முகப்பில் காணப்படுகின்ற பெண் இலட்சுமியென்றே கருதப்படுகின்றது. ஆதலால் இந்நாணயங்கள் இலட்சுமி தகடு நாணயம் என அழைக்கப்படுகின்றன. இந்த நாணயங்கள் இரண்டு விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அது வார்க்கப்பட்டதாகவும் மற்றும் செப்புத் தகட்டில் அச்சிடப்பட்ட விதத்திலுமாகும். நாணயம் பல்வேறு அளவுகளைக் கொண்டதாக காணப்படுகின்றது. இதற்கமைய வார்க்கப்பட்ட வகையைச் சேர்ந்த நாணயத்தின் நீளம் 1¼ அங்குலமாகவும் அகலம் ½ அங்குலமாகவும் காணப்படுகின்றது. நாணய தயாரிப்பின்போது அண்ணளவாக 60 சதவீதம் ஈயமும் 15 சதவீதம் செப்பும் கலக்கப்பட்டுள்ளது.
தாமரை மலர் மீது நிற்கும் இலட்சுமி, மலரின் இரு புறத்திலிருந்தும் எழுகின்ற இரண்டு தாமரைத் தண்டுகளை கைகளால் பிடித்துள்ள விதமும், தோள் வரை எழுந்துள்ள அந்த தாமரைத் தண்டுகளில் பூத்துள்ள இரண்டு தாமரை மலர்களின் மீது தும்பிக்கைகளால் தண்ணீர் குடமொன்று வீதம் ஏந்தியுள்ள இரண்டு யானைகள் அவளை தண்ணீரால் நீராட்டுகின்ற விதமும் காட்டப்பட்டுள்ளது. இந்த வகையைச் சேர்ந்த சில நாணயங்களில் இலட்சுமி தாமரை மலரின் மீது அமர்ந்துள்ள விதமே காணப்படுகின்றது.
அநுராதபுரம் யாழ்ப்பாணத்தின் வல்லிபுரம், திருக்கேதீஸ்வரம், கந்தரோடை, மன்னார், முல்லைத்தீவு, சிலாபம், திஸ்ஸமகாராமய ஆகிய பல்வேறு பிரதேசங்களிலிருந்து மேற்படி இலட்சுமி தகடு நாணயத்தைக் கண்டெடுக்கக்கூடியதாக இருந்துள்ளது.
கஹவானு அல்லது லங்கேஸ்வரா நாணயக்குத்திகள்

சிங்களவர்களின் தங்க நாணயம் ‘ஹகவனு’ என அறியப்பட்டதுடன் இது கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து 8ஆம் நூற்றாண்டு வரை இத்தீவில் சுற்றோட்டத்திலிருந்தது. இவை தங்க உலோகத்தினாலும் தங்க முலாம் பூசப்பட்டும் தயாரிக்கப்பட்டிருந்ததோடு, பெறுமதிக்கு ஏற்ப ‘கஹவனு’, ‘அட் கஹவனு’, ‘தெஅக’ மற்றும் ‘அக’ என்றவாறு பயன்படுத்தப்பட்டுள்ளன. நாணயத்தின் முகப்பில் தாமரைத் தண்டொன்றில் நிற்கின்ற ஒரு உருவம் காணப்படுகின்றது. அந்த உருவம் ‘தோதிய’ போன்றதொரு ஆடையை அணிந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. மேற்புறம் நோக்கியதாயுள்ள இடது கையினால் முகத்தின் பக்கம் ஒரு பொருளைச் சாய்த்துப் பிடித்துள்ளதைக் காணலாம். சிலர், நாணயத்தின் முகப்புப் பகுதியில் செல்வத்திற்கு அதிபதியாகக் கருதப்படுகின்ற குபேரனின் உருவமும் மறுபக்கத்தில் சங்கு மற்றும் தாமரையின் உருவமும் குறிக்கப்பட்டுள்ளதாக கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எவ்வாறாயினும், கஹவனுவின் முகப்பிலும் பின்புறத்திலும் உள்ள உருவங்களின் இடது கையினால் பிடித்துள்ள பொருளின்படி அந்த நாணயங்களை சில வகைகளாகப் பிரித்துக் காட்ட முடியும்.சூரியன் மற்றும் சந்திரன்,கிண்ணம்,தாமரை மற்றும் பிறை,பிறை மற்றும் பிறை,மல்லிகை மொட்டு மற்றும் தாமரை,உருண்டை மற்றும் வளையம்,மல்லிகை மற்றும் சங்கு என்றவாறாகும்.
அனுராதபுத்திற்குரிய வெளிநாட்டு நாணயக்குத்திகள்

பண்டைய கால இலங்கை கப்பல்துறை மத்திய நிலையமாகப் பெற்றிருந்த இடத்தைப் பற்றி அநுராதபுர இராசதானிக் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் சான்றுபகர்கின்றன. இவ்வாறு சர்வதேச வர்த்தகத்தின்போது கொடுக்கல் வாங்கலுக்காகப் பயன்படுத்தப்பட்ட கிரேக்க, உரோம, சீன, அரேபிய மற்றும் இந்திய நாணயங்கள் பலவும் அநுராதபுரம், மிகிந்தலை, சீகிரியா, குருணாகல், மாத்தறை, அகுருகொட மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.



உரோமநாணயங்கள்
செப்பினால் செய்யப்பட்ட பல உரோம நாணய வகைகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த நாணயங்கள் உரோமிலேயே வார்க்கப்பட்டுள்ளன. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இத்தகைய நாணயங்களைக் கண்டெடுக்க இயலுமாயிருந்ததன் மூலம், அத்தகைய நாணயங்கள் இந்நாட்டில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. நாணயங்களில் பெரும் பகுதி கி.பி. 4-5 ஆம் நூற்றாண்டுகளுக்குரியவையாக இருக்கின்றன. அக்காலத்தில் உரோம பேரரசுக்கும் எமது நாட்டுக்கும் மத்தியில் பெருமளவு வர்த்தக நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளமை இதன் மூலம் தெளிவாகின்றது. அதேபோன்று இந்த நாணயங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தேய்வடைந்துள்ள இயல்பைக் காணக்கூடியதாக உள்ளது.

சர்வதேச வர்த்தகத்தின் மூலம் கிடைத்த உரோம நாணயங்களுக்கு மேலதிகமாக எமது நாட்டிலும் உரோம நாணயங்கள் வார்க்கப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளது. அத்தகைய பெருந்தொகையான நாணயங்கள் மாத்தறை நாவிமன பிரதேசத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிகிரியா மற்றும் அநுராதபுரம் அகழ்வுகளின் மூலம் இந்த இரண்டு வகைகளுக்குமுரிய அதாவது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உரோம நாணயங்கள் மற்றும் உரோமப் பேரரசில் தயாரிக்கப்பட்ட உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகை நாணயங்களுக்குமிடையே காணக்கூடியதாயுள்ள பிரதானமான வேறுபாடு யாதெனில், உரோமத்தில் தயாரிக்கப்பட்ட நாணயங்களில் காணப்படுகின்ற ஆங்கில எழுத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாணயங்களில் காணப்படாமையேயாகும். அதற்குப் பதிலாக பல்வேறு வடிவங்களிலான சிறிய கோடுகள் நாணயங்களில் சேர்க்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

சீனநாணயங்கள்

இந்த நாணயங்கள் செப்பு மற்றும் அதிகளவு செப்புக் கலக்கப்பட்ட உலோகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும் தயாரிக்கப்பட்ட நாணயங்கள் பல்வேறு அளவுகளைக் கொண்டுள்ளன. வட்ட வடிவிலான இந்நாணயங்களின் மத்தியில் சதுரக் கட்டமொன்று துளையாக அமைக்கப்பட்டிருக்கும். அதன் நான்கு பக்கங்களிலும் சீன வரைகோட்டு எழுத்துக்களால் சீனப் பேரரசரின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். நாணயத்தின் மறுபுறம் எந்தவொரு வரைபடமோ எழுத்தோ காண்பதற்கு இருக்காது.

அரேபிய நாணயங்கள்
இந்த நாணயங்கள் செப்பு, வெள்ளி ஆகிய உலோகங்களின் மூலமே தயாரிக்கப்பட்டுள்ளன. நாணயங்களின் முகப்பில் அரேபிய மொழியில் பக்தி வாசகர்கள் குறிக்கப்பட்டுள்ளன. நாணயத்தின் மறுபுறம் அவை வெளியிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.