ஒன்றிணைந்த இலங்கை நாட்டிற்குள் பூரண அதிகாரத்தை வழங்குவதே தனது இலக்காகும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ஐக்கிய இலங்கைக்குள் பூரண அதிகாரத்தை வழங்குவோம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம். அந்த நிலைப்பாட்டின்தான் நாம் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை விரைவில் தீர்க்கவே நாம் முயற்சித்து வருவதாகவும், மக்கள் தான் இறுதித் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும், நான் கட்சியின் பிரதித்தலைவராக இருக்கின்றதாகவும், தெரிவித்துள்ளதார்..
எனவே, ஜனாதிபதித் தேர்தலில் நான் களமிறங்குவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அவ்வாறு களமிறங்கினால், வெற்றி உறுதி என்பதையும் நான் இவ்வேளையில் கூறிக்கொள்வதாகவும், நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விசேட சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளேன். உண்மையில், எமக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. நாம் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.” என கூறினார்.