இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸின் 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள நியுசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
நேற்றைய தினம் காலி மைதானத்தில் ஆரம்பமாகிய முதலாவது டெஸ்ட் போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியுசிலாந்து அணி இலங்கை வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸிற்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதைதத்தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை பெறந்றுக்கொண்டுள்ளது.
இதன் போது இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 53 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.