இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் மற்றும் அணி வீரர் லஹிரு திரிமான்ன ஆகியோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்ப்டடுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை இதனை உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்காக இலங்கை அணி தயாராகி வருகின்றது.
இந்நிலையில் அணி வீரர்களுக்கும், பயிற்றுக் குழாமுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் மேற்படி இருவருக்கும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
