இலங்கை அணியின் பல தோல்விகள் மற்றும் நெருக்கடிக்கு காரணம் என்ன என்பதை அணியின் முன்னாள் வீரரான தற்போதைய தொழில்நுட்பக்குழு உறுப்பினர் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அம்பலப்படுத்தியிருக்கின்றார்.
அணியில் ஒழுக்கவீனமே இதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அணியின் தொழில்நுட்பக் குழு என ஒரு குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கடந்த வாரத்தில் நியமித்தார்.
அதில் முன்னாள் வீரரான அரவிந்தடி சில்வா தலைமை தாங்குகின்ற அதேவேளை, இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான கிரிக்கெட் பிரபலங்களாகிய மஹேல ஜயவர்தன, குமார சங்கக்கார, முரளிதரன் உள்ளிட்டவர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து முரளியிடம் ஆங்கிலப்பத்திரிகை ஒன்று கருத்து கேட்டபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.