இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகராக சரா ஹூல்ரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சரா ஹூல்ரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கான நியமனம் கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் எதிர்வரும் சில தினங்களில் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹூல்ரன் அம்மையார் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் துணை இயக்குநராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.